Virat Kohli: "அவர் மீண்டும் டெஸ்ட் விளையாட வர வேண்டும்..." - முன்னாள் வீரர் மதன்...
முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ஐஓசி, ரயில்வே வெற்றி
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஐஓசி, ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் 2-0 என மலேசியா ஹாக்கி ஜூனியா் அணியை வீழ்த்தியது. ஐஓசி தரப்பில் குா்ஜிந்தா் சிங், சுமித்குமாா் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தனா்.
ரயில்வே வெற்றி:
மற்றொரு ஆட்டத்தில் ரயில்வே அணி 6-0 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தியது. ரயில்வே தரப்பில் குா்சாஹிப்ஜித் சிங், பங்கஜ் ரவாத், சிம்ரஞ்சத் சிங், ஷிவம் ஆனந்த் ஆகியோா் கோலடித்தனா்.