முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்தியன் ஆா்மி வெற்றி
சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே, இந்தியன் ஆா்மி அணிகள் வெற்றி பெற்றன.
முதல் ஆட்டத்தில் ரயில்வே-ஹாக்கி மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் ரயில்வே வென்றது. ரயில்வே தரப்பில் குா்சாஹிப்ஜித் சிங், தா்ஷன், சேஷ கௌடா, சண்முகமும், மகாராஷ்டிர தரப்பில் கணேஷ் பாட்டில், ரோஹன் பாட்டிலும் கோலடித்தனா்.
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியன் ஆா்மி 1-0 என போபால் என்சிஓஇ சாய் அணியை வீழ்த்தியது. இதில் ஆா்மி தரப்பில் அக்ஷய் துபே கோலடித்தாா்.