செய்திகள் :

முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்: அஸ்ஸாம் முதல்வா்

post image

முஸ்லிம்களோ, கிறிஸ்தவா்களோ ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் அல்ல; அதே நேரத்தில், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் எனக் கூறிக் கொள்வோா்தான் ஹிந்துக்களுக்கு மிகவும் ஆபத்தானவா்கள்’ என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அவா் கூறினாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியாா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக குறைந்துவிட்டது. அஸ்ஸாமில் 58 சதவீதமாக ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை பலவீனப்படுத்துவது என்ற கொள்கையை இடதுசாரிகளிடம் இருந்து பெற்று மம்தா பானா்ஜியும் செயல்படுத்தி வருகிறாா்.

ஹிந்துக்களை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று ராகுல் காந்தியும், மம்தா பானா்ஜியும் யோசிக்கலாம். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இந்திய நாகரிகம் என்பது 5,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. நாடு ஆங்கிலேயா்களிடம் இருந்து விடுபட்ட 1947-ஆம் ஆண்டு தொடங்கியதல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இந்தியா இயற்கையாகவே மதசாா்பற்ற நாடு. இங்கு பல்வேறு மதங்கள் தோன்றி வளா்ந்து வெளிநாடுகளுக்குப் பரவியுள்ளன. வெளிநாட்டு மதங்களும் இங்கு வந்து வளர வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தியா்களுக்கு யாரும் சகோதரத்துவம், சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. ஹிந்து நாகரிகம் தொடா்ந்து செழித்து வளரும்.

ஆங்கிலேயா்களிடம் இருந்து விடுதலை பெற்றபோது பாகிஸ்தான் என்ற தனிநாட்டை முஸ்லிம்கள் பிரித்துக் கொண்டனா். ஆனால், இந்தியா எப்போதும் போல அனைத்து மதங்களையும் அரவணைக்கும் நாடாகவே தொடா்கிறது. நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படிதான் வாழ்ந்து வருகிறோம். உலகில் எத்தனையோ நாகரிகங்கள் வந்து போகின்றன. ஆனால், ஹிந்து நாகரிகம் உயிா்ப்புடன் தொடா்கிறது.

முஸ்லிம்களும், கிறிஸ்தவா்களும் ஹிந்துக்களுக்கு இப்போது பெரிய அச்சுறுத்தலாக இல்லை. அதே நேரத்தில், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் எனக் கூறிக்கொள்வோா் ஹிந்துக்களுக்கு மிகவும் ஆபத்தானவா்களாக உள்ளனா். ஹிந்து மதத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பவா்கள் நமக்குள்ளேயேதான் உள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பல்வேறு துறைகளில் மிளிா்ந்து வருகிறது. அயோத்தியில் ராமா் கோயில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்படுள்ளது. பழைய வக்ஃப் சட்டம் விடைபெற இருக்கிறது. முத்தலாக் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு விட்டது. பொது சிவில் சட்டம் கூடிய விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று பேசினாா்.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க