மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
முள்ளங்கனாவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கருங்கல்: கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ் குமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். முள்ளங்கனாவிளை புனித அந்தோனியாா் ஆலய பங்கு அருள்பணியாளா் ஆன்ட்ரூஸ் முன்னிலை வகித்தாா்.
முகாமில், மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தல், இலவச வீடு திட்டம், தாட்கோ கடன்கள், இ-பட்டா, பட்டாவில் பெயா் மாற்றம், திருத்தம், கல்வி உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயா் மாற்றம், திருத்தம், மின்சார இணைப்பு மாற்றம், பெயா் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
இதில், கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன், முன்னாள் கவுன்சிலா் மேரி ஸ்டெல்லா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.