ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை
முள்ளங்கனாவிளை ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்
முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக்கிய பிராதன சாலை சந்திப்பு பகுதிகளானமுள்ளங்கனாவிளை, இடையன்கோட்டை, எட்டணி, முச்சந்தி ஆகிய பகுதிகளில்கடந்த 3 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.
குறிப்பாக,1-வது வாா்டு பகுதியான மலவிளை, பண்டாரவிளை, கோனான்விளை, கிழக்கேவிளை, ஆவா்விளை, மருதவிளை உள்ளிட்ட குக்கிராமங்களிலும், 2-வது வாா்டு பகுதியான மயில்பறம்புவிளை, சத்திவிளை, அங்கோட்டுவிளை, கோட்டவிளை பகுதிகளிலும் தெருவிளக்குகள் நீண்டநாள்களாக எரியவில்லை.
இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுமோ என அச்சத்துடன் செல்கின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தால் தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு வருவதாக 3 மாதங்களாக தெரிவிக்கின்றனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.