செய்திகள் :

மு.க.முத்து மறைவு: ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி

post image

தனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொன்ன செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, வசீகரன், துரை வைகோ, தமிழிசை சௌந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சத்யராஜ், விக்ரம் உள்ளிட்ட கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் - ஊடகவியலாளர்கள், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கலைப் பகிர்ந்துகொண்ட ராகுல் காந்தி, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் மற்றும் எனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த சீமான் உள்ளிட்ட அனைவர்க்கும் நன்றி! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார். மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலும் பின்னர், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து அவரது உடல் சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

CM Stalin has thanked everyone who expressed condolences over the death of his brother M.K.Muthu.

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி!

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கர்நாடக மாநில அணைகள... மேலும் பார்க்க

தக்காளி விலை திடீர் உயர்வு: ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 22) ஒரே நாளில் ரூ. 10 உயர்ந்து, ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்ட... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்துக்கு... புதிய அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், அந்தத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில... மேலும் பார்க்க

அதிமுகவை எதிர்க்காதது ஏன்? தவெக விளக்கம்!

அதிமுகவை எதிர்க்காதது ஏன் என்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்து விட்டனர் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.சேலம் பழைய பேருந்து நிலையம்... மேலும் பார்க்க

தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு

அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவும் இணைய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாத... மேலும் பார்க்க