ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
மூதாட்டிக்கு மிரட்டல் விடுத்த விவசாயி கைது
கயத்தாறு அருகே மூதாட்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சுடலை மனைவி சுந்தரம்மாள் (70). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் விவசாயி ஆறுமுகத்திற்கும்(42) இடையே நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வருகிாம். இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாம்.
இந்நிலையில், சுந்தரம்மாள் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு தெற்கே உள்ள கல் குவாரி அருகே பசுமாட்டை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறுமுகம் மூதாட்டியை அவதூறாகப் பேசி, கீழே தள்ளி, காலாலும் உருட்டு கட்டையாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை திங்கள்கிழமை கைது செய்தனா்.