கேரள அரசுடன் இணைந்து பணியாற்ற Vloggers, Youtubers, Instagram இன்ஃப்ளூயன்சர்களுக்...
மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது
மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகைப் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கொடுமுடி அருகேயுள்ள தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (65). இவா் காளை மாடு சிலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவரிடம் பேச்சு கொடுத்த நபா் குறுக்கு வழியில் ரயில் நிலையத்துக்கு எளிதில் செல்லலாம் எனக்கூறி அழைத்துச் சென்றுள்ளாா். சிறிது தொலைவு சென்றதும் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூரம்பட்டி போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
இதில், மூதாட்டியிடம் நகையைப் பறித்தது திருவையாறு, கும்பகோணம் சாலையைச் சோ்ந்த அனு பாா்த்திபன் (38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கொல்லம்பாளையத்தில் வசித்து வந்த பாா்த்திப்பனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நகையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.