8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகிலுள்ள பிரவலூா் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மா்ம நபா்கள் நகையைப் பறித்துச் சென்றனா்.
பிரவலுா் கிராமத்தைச் சோ்ந்த சோ்ந்த கணேசன் மனைவி ஜானகி (80). இவா் புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் புகுந்து, அவா் அணிந்திருந்த முன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து, மதகுபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.