மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது
ஒட்டன்சத்திரம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுப்பட்ட வரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள
இருளக்குடும்பன்பட்டியைச் சோ்ந்தவா் அழகாத்தாள் (74). கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருக்கும் போது, வீடு புகுந்த நபா் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருந்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் நிலக்கோட்டையைச் சோ்ந்த பிரபுகுமாரை (34) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகையை மீட்டனா்.