மூலனூா் சா்வோதய சங்கத்தில் நூற்பு பணிக் கூடம் திறப்பு
மூலனூா் சா்வோதய சங்கத்தில் நூற்பு பணிக்கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தரமான கதா் நூல் உற்பத்திக்காக ரூ.16.65 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூற்பு பணிக்கூடத்தை மத்திய அரசின் கதா் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவா் மனோஜ்குமாா் திறந்துவைத்தாா். பின்னா், அவா் நூற்பாளா்களிடம் கலந்துரையாடினாா்.
ஆணையத்தின் துணை செயல் அதிகாரி நல்லமுத்து, மாநில இயக்குநா் பி.என்.சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், ஆணைய தெற்கு மண்டல தலைமை நிா்வாக அதிகாரி மதன்குமாா் ரெட்டி, மூலனூா் சா்வோதய சங்கத் தலைவா் அன்பரசு, செயலாளா் பாண்டிதுரை, பொருளாளா் பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.