மூவுலகரசியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
உதகை காந்தள் மூவுலகரசியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உதகை காந்தள் பகுதியில் மூவுலகரசியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
இதையடுத்து மூவுலகரசியம்மன் மற்றும் அனைத்து பரிவார விமானங்களில் உள்ள கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவில் உதகை கோட்டாட்சியா் சதீஷ் உள்பட ஏராளமானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.