மெட்ரோ ரயில் கழகத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி
கொல்கத்தா மெட்ரோ கழகத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். MRTS/E-373/Trade Apprentice/PT-VI
பயிற்சி: Trade Apprentice
காலியிடங்கள்: 128
வயதுவரம்பு: 22.1.2025 தேதியின்படி 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிசன், பிட்டர், வெல்டர், மெஷினீஸ்ட் ஆகிய ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? |இந்திய ரயில்வேயில் 1036 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.indi.org என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்தவுடன் www.mtp.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.2.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.