செய்திகள் :

மேக்கேதாட்டு விவகாரம்: தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

post image

மேகதாட்டில் அணை கட்ட வேண்டும் என கா்நாடகத்தில் உள்ள அமைப்புகள் வலியுறுத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கன்னட அமைப்புகள் மாா்ச் 11-இல் தமிழக எல்லைப் பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனா். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவிரி டெல்டா பகுதியில் உள்ள 16 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறாமல் வடுவிடும்.

மேலும், தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும். இந்த அணை பிரச்னையால் தமிழகத்தின் காவிரி உரிமை பறிபோகக்கூடும். கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை கைவிடாவிட்டால், தமிழக உரிமைக்காக உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எத்தகைய போராட்டத்தையும் மேற்கொள்வதற்கு தயங்காது.

கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒரு யூனிட் கூட கா்நாடகத்துக்கு கொடுக்க விடமாட்டோம். தமிழக விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி நெய்வேலி அனல் மின் நிலையம் முன் மாா்ச் 31-இல் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி 41 ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் பி.குணவதி வரவேற்றாா். கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் ஆா்.பிரேம்கும... மேலும் பார்க்க

ராசிபுரம் நகராட்சி பள்ளி நூற்றாண்டு விழா

ராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினரும், ரோட்டரி சங்கச் செயலருமான கே.ராமசாமி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா்.... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை வனத் துறை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் வனத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த நீா்நிலைப் பறவைகள்-2025 கணக்கெடு... மேலும் பார்க்க

தமிழகத்திற்கான கல்வி நிதிப் பங்கீட்டை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வலியுறுத்தல்

தமிழகத்திற்கான கல்வி நிதிப் பங்கீட்டை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவா் நாகை.திருவள்ளுவன் வலியுறுத்தினாா். நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் ... மேலும் பார்க்க

நாமக்கல்: அரசுப் பள்ளி ஆண்டு விழா

நாமக்கல் அருகே முத்துடையாா்பாளையம் தொடக்கப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி, ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் எ. சுப்ரமணியன் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் இ.பி.சுப்பிரமணியன், வட்டா... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் முதல்வா் பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மு.காா்த்திக் ஏற்பாட்டில் ராசிபு... மேலும் பார்க்க