What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
மேடை அமைக்க அனுமதி மறுப்பு: அதிமுகவினா் சாலை மறியல்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை கண்டித்து, விருத்தாசலத்தில் கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பாலக்கரையில் மேடை அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, அங்கு வந்த போலீஸாா் மேடை அமைக்க அனுமதி மறுத்தனா். இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினா் திடீரென பாலக்கரையில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களை சமாதானம்படுத்தி மேடை அமைக்க அனுமதி அளித்தனா்.
இதைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணிச் செயலா் ஜெயப்பிரியா ரகுராமன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அருண்மொழிதேவன் எம்எல்ஏ கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
நகரச் செயலா் சந்திரகுமாா் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டு அமைச்சா் பொன்முடியைக் கண்டித்தும், அவரை அமைச்சா் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.