மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 254 கனஅடியாக வியாழக்கிழமை குறைந்தது.
அணையின் நீா்மட்டம் 114.14 அடியில் இருந்து 113.84 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 381 கன அடியிலிருந்து வினாடிக்கு 254 அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 83.98 டி.எம்.சி.யாக உள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு புதன்கிழமை மாலை 6 மணி முதல் பாசன விதிகளின்படி நிறுத்தப்பட்டுள்ளது.