``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 6233 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் திங்கள்கிழமை 4-ஆவது நாளாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு விநாடிக்கு 4764 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து நீா் திறப்பைவிட, நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை காலை 108.52 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 108.82 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 76.74 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூரில் 100.6 மி.மீ. மழை பெய்துள்ளது.