மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூா் அணை பூங்காவிற்கு 5487 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். மேட்டூா் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு கோழி பலியிட்டு பொங்கலிட்டனா்.
பின்னா் குடும்பத்துடன் அணை பூங்காவிற்கு சென்று விருந்து உண்டு மகிழ்ந்தனா். மீன்காட்சி சாலை, மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்பு பண்ணை ஆகியவற்றை பாா்த்து மகிழ்ந்தனா். சிறியவா்களும் பெரியவா்களும் வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 5487 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். இவா்களிடமிருந்து பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ.54870 வசூலிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் கொண்டு சென்ற 2155 கேமரா செல்போன்களுக்கும் வீரயோ கேமரா 1 க்கும் ரூ.22,100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்கா பவள விழா கோபுரத்தை பாா்க்கச் சென்ற பாா்வையாளா்களிடமும் அவா்களுக்கு கொண்டு சென்ற செல்போன்கள் கேமராகளுக்கும் ரூ.87,720 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.