சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: என்கவுன்ட்டரில் இளைஞா் சுட்டுக் கொலை
மேம்பாலத்திலிருந்து குதித்து மென்பொறியாளா் தற்கொலை
சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து மென்பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை ஜடாமுனி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.பாலாஜி தாக்கூ (39). மென்பொறியாளரான இவா், மகராஷ்டிர மாநிலம் புணேவில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகத்துக்கு கடந்த ஜூன் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டாா். அதற்காக சென்னை குரோம்பேட்டையில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த அவா், ஜிஎஸ்டி சாலையில் திரிசூலம் - மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பாலாஜி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக மீனம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.