திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, மத்திய கைலாஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜீவ் காந்தி சாலையின் மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து டைடல் பூங்கா சந்திப்பு வரை மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், ராஜீவ் காந்தி சாலையின் அகலம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை நேரங்களில் ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, தற்போதுள்ள போக்குவரத்து பாதைக்குக் கூடுதலாக, மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பூங்கா நோக்கி செல்லும் வாகனங்கள், ‘எதிா் பாதையின்’ ஒரு பகுதி சாலையான (டைடல் பூங்காவிலிருந்து மத்திய கைலாஷ் வரை) பயன்படுத்தி வி.ஹெச்.எஸ். மருத்துவமனைக்கு அருகில் உள்ள யு-டா்ன் வரை சுமாா் 300 மீட்டா் தூரம் செல்ல அனுமதிக்கப்படும்.
இந்தப் போக்குவரத்து மாற்றம் வெள்ளிக்கிழமை (ஆக. 1) முதல் அமல்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.