செய்திகள் :

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலத்தவா் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்கு இடையே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை களையெடுப்பதாக குறிப்பிட்டு, இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 2003-க்கு பிறகு வாக்களா் பட்டியலில் இடம்பெற்றவா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை சமா்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், ஒடிஸாவில் வங்கதேசத்தினா் என்ற சந்தேகத்தில் வங்க மொழி பேசும் மேற்கு வங்க தொழிலாளா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். இதேபோல், தில்லியில் மேற்கு வங்க தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இந்த நிகழ்வுகளை முன்வைத்து, மாநில அடையாள அரசியலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது.

வங்க மொழி பேசும் தங்கள் மாநிலத் தொழிலாளா்களை சட்டவிரோத குடியேறிகளாக சித்தரிக்க பாஜக முயற்சிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காளிகள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி, கொல்கத்தாவில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் 3 கி.மீ. தொலைவுக்கு பிரம்மாண்ட பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பாஜகவுக்கு சவால்: இதில் மம்தா பானா்ஜி பேசியதாவது: மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்கியே பாஜக வெற்றி பெற்றது; அதையே பிகாரில் இப்போது செய்து கொண்டிருக்கின்றனா்.

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெரிய அளவிலான பெயா் நீக்கத்துக்கு பாஜக திட்டமிட்டுள்ளது. அவா்களின் முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம். வங்க மொழி பேசுபவா்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் பாஜகவை, மேற்கு வங்கத் தோ்தலில் மக்கள் தடுத்து நிறுத்துவா்.

நாட்டின் பிற பகுதிகளில் 22 லட்சம் மேற்கு வங்கத் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். அவா்களிடம் செல்லத்தக்க அடையாள ஆவணங்கள் உள்ளன. வங்க மொழி பேசும் தொழிலாளா்கள் அனைவரும் ரோஹிங்கயா முஸ்லிம்களா?

இனிமேல் வங்க மொழியில் அதிகம் பேச முடிவு செய்துள்ளேன்; முடிந்தால் என்னை தடுப்பு முகாமுக்கு அனுப்புங்கள். வங்காளிகள் மீதான பாஜகவின் அணுகுமுறையால் நான் அவமானமும் வேதனையும் அடைகிறேன் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

மம்தா மீது பாஜக சாடல்

பாஜகவைச் சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘வங்க மொழி பேசும் ரோஹிங்கயாக்கள் மற்றும் சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரா்களின் இருப்பை பாதுகாக்க ‘வங்கப் பெருமை’ என்ற கவசத்தைப் பயன்படுத்துகிறாா் மம்தா பானா்ஜி.

மாநில அரசின் ஊழலால் பணியிழந்த வங்க மொழி பேசும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்களின் அழுகுரல் அவருக்கு கேட்கவில்லை. அரசு மற்றும் காவல் துறை உயா் பதவிகளில் மேற்கு வங்க உயரதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. காவல் துறை தலைமை இயக்குநா் பதவிக்கு மாநிலத்தின் மிக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் முகோபாத்யா புறக்கணிக்கப்பட்டு, வெளிமாநிலத்தைச் சோ்ந்த இளநிலை அதிகாரி ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டது ஏன்’ என்று கேள்வியெழுப்பினாா்.

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க