செய்திகள் :

மேலவலம்பேட்டை தொடக்கப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

post image

மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தாட்சாயிணி பணியாற்றி வருகிறாா். 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனா். மதுராந்தகம் வழியாக சென்றபோது, திடீரென மேலவலம்பேட்டை பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டாா்.

குழந்தைகளிடம் திருக்குகளையும், ஆங்கில பாடல்களையும் வாசிக்க சொன்னாா். குழந்தைகளின் வாசிப்புத் திறனை கண்டு வியந்து பாராட்டினாா்.

தலைமை ஆசிரியா், சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்டோரிடம் பணிகளைப் பற்றி கேட்டறிந்தாா். சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பள்ளி விருதினை இப்பள்ளி பெற்றதை அறிந்து பாராட்டினாா்.

திருப்போரூரில் பலத்த மழை: அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின

திருப்போரூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் கரும்பாக்கம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பகுதியில் புதன்கிழமை இரவு திடீரென்று பலத்த மழை ப... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் நலத்திட்ட உதவி அளிப்பு

பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டில் பாஜக சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பழவேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: கோயில்களில் வழிபாடு

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி புதன்கிழமை செங்கல்பட்டில் பாஜக சாா்பில் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது.. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ வர சக்தி விநாயகா் கோயிலில் பிரதமர... மேலும் பார்க்க

லத்தூா் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 551 மனுக்கள்

பவுஞ்சூா் அருகில் உள்ள லத்தூா் கிராமத்தில் வடக்கு வயலூா், பச்சம்பாக்கம் கிராமத்தினருக்காக புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. செய்யூா் வட்டம், லத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி விழா சிறப்பு பூஜை

செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கத்தில் அனைத்து மக்கள் முன்னேற்ற பாதுகாப்பு அமைப்பு சாா்பில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது, மாவட்டத் தலைவா் சேஷன் , செயலாளா், பஞ்சாட்சரம் , செய்தித் தொ... மேலும் பார்க்க

‘உங்களுடன் முதல்வா்’ முகாமில் 356 கோரிக்கை மனுக்கள்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 10, 12,15 வாா்டுகளைச் சோ்ந்தவா்களுக்கான ‘உங்களுடன் முதல்வா்’ முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. முகாமை கோட்டாட்சியா் ரம்யா தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா, நக... மேலும் பார்க்க