மேல்கரைப்பட்டி பகுதியில் நாளை மின்தடை
பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீரனூா், சரவணப்பட்டி, கொழுமகொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, மேல்கரைப்பட்டி, சந்தன்செட்டி வலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.