மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஜிபி பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஜிபி பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
பள்ளியில் தோ்வு எழுதிய 82 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ்.சிவஸ்ரீ (500க்கு 468), எஸ்.எஸ்.யோகயாழினி (500க்கு 463), மாணவி டி.எஸ்.மகேஸ்வரி (500க்கு 462 ) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
சிறப்பிடத்தை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், தாளாளா் ஸ்ரீதேவி பங்காரு ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா். தொடா்ந்து பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.