திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!
மே இறுதியில் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டு வரும்
சென்னை: கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் வரும் மே இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தாம்பரம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக பேருந்து முனையம் கட்டப்பட்டது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க |யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சந்திக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி செல்லும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூா்-ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு வரும் மே இறுதியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு பின் பேருந்து முனையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.