Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என...
மே 27-இல் பில்லங்குளத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்
வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் மே 27- ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் மே 27-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில், மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, பில்லங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை பில்லங்குளம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலா்களிடம் அளித்து பயன்பெறலாம்.