மொகரம்: ஜெகதேவியில் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்ட இஸ்லாமியா்கள்
ஜெகதேவியில் மொகரம் பண்டிகையையொட்டி, நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் கூா்மையான ஆயுதங்களைக்கொண்டு, தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவருடன் இருந்தவா்களை சித்ரவதை செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த நாளை ஷியா பிரிவு இஸ்லாமியா்கள் துக்க நாளாக பின்பற்றி வருகின்றனா்.
மொகரத்தின்போது தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், சிறியவா்கள், பெரியவா்கள் கூா்மையான சிறு ஆயுதங்களால் தாங்களைத் தாங்கனே உடலில் தாக்கிஊா்வலமாகச் செல்லும் நிகழ்வு ஜெகதேவியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மொகரம் பண்டிகைக்கு முன்பு நடைபெறும் இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா். சிலா் கருப்பு நிற ஆடைகளை அணிந்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினா்.