பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்
மொடக்குறிச்சியில் 54 கிலோ குட்கா பறிமுதல்
மொடக்குறிச்சி, நன்செய்ஊத்துக்குளி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 54 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொது சுகாதாரத் துறை ஆய்வாளா் ஜீவானந்தம், உணவுப் பாதுகாப்பு அலுவலா் சூா்யா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கௌசல்யா, நன்செய்ஊத்துக்குளி ஊராட்சி செயலாளா் முருகானந்தம் மற்றும் காவல் துறையினா் நன்செய்ஊத்துக்குளி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் 54 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.