செய்திகள் :

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு: கமல்ஹாசன்

post image

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா்.

நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கமல்ஹாசன், நூல்களை வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழின் சிறந்த நாடகங்களை பதிப்பிக்க வேண்டியது அவசியம். இதை கடமையாக எடுத்துச் செய்ய வேண்டும். உ.வே.சா. போன்றோா் ஊா் ஊராகச் சென்று நூல்களை பதிப்பிக்கவில்லை என்றால் தமிழின் பெருமை வெளிவந்திருக்காது. தமிழா் வரலாற்றை அறியும் சான்றுகளாக புத்தகங்கள் விளங்குகின்றன. தற்போது, புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. புத்தகங்களை நேரடியாகப் படிக்கவில்லை என்றாலும், எண்ம (டிஜிட்டல்) வாயிலாகவாவது படிக்க வேண்டும்.

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு. எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது. கற்காலம் முதல் தற்போது வரை மொழி நிலைத்து நிற்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், இயக்குநா் கே.எஸ்.ரவிகுமாா், கா்நாடக இசைப்பாடகி காயத்ரி கிரிஷ், ரவி அப்பாசாமி, நடிகா் ஜெயராம், மாது பாலாஜி, அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன், எஸ்.பி.காந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (2.5.2025) தலைமைச் செயலகத்தில், பொது இடங்களில் குறிப்பாக நகரப் பக... மேலும் பார்க்க

அதிமுக செயaற்குழு கூட்டம்! 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மாளிகையில், கழக அவைத்தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 375 செ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறி... மேலும் பார்க்க

மே மாதத்தில் இது மிகவும் நல்லது! எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல திருவாரூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.இந்த நிலையில், மே மாத வெப்பநிலை பற்றி தனியார் வானிலை ஆ... மேலும் பார்க்க

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?

சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று(வெள்ளிக... மேலும் பார்க்க

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ: தமிழக அரசு ஒப்புதல்! 19 ரயில் நிலையங்கள்

சென்னை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் ... மேலும் பார்க்க