செய்திகள் :

மோடியை புகழ்ந்த கங்கனா: பதிவை நீக்கச் சொன்ன ஜேபி நாட்டா; `வருந்துகிறேன்' - கங்கனா ரனாவத் பதிவு!

post image

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை மெதுவாக குறைத்து வருகிறது. அந்தத் தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் ``இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத் தொழிற்சாலைகளை கட்டமைப்பதை நான் விரும்பவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவில் புகைச்சல் இருப்பதாக பேசப்பட்டது.

மோடி - கங்கனா ரனாவத்

இந்த நிலையில், பாஜக எம்பி கங்கனா ரானாவத் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கைக்கு என்னக் காரணமாக இருக்கும்?

ட்ரம்ப் அமெரிக்க அதிபர் மட்டுமே. ஆனால் உலகின் மிகவும் அதிகம் விரும்பப்படும் பிரதமர் மோடி.

ட்ரம்ப் இரண்டாவது முறையாகதான் அதிபராகியிருக்கிறார். ஆனால் மோடி மூன்றாவது முறையாக பிரதமர்.

ட்ரம்ப் ஆல்பா மேல் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நம் பிரதமர் எல்லா ஆல்பா மேல்-க்கும் மேலான அப்பா.

இது ட்ரம்ப்பின் பொறாமையா அல்லது இராஜதந்திர பாதுகாப்பின்மையா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் ட்ரம்பை விமர்சித்து கமெண்ட் செய்து வந்தனர். இதற்கிடையில் பா.ஜ.க எம்.பி கங்கானா ரானாவத்தின் பதிவு எக்ஸ் பக்கத்திலிருந்து டெலிட் செய்யப்பட்டது.

கங்கனா

இது குறித்து விளக்கமளித்து பதிவிட்டிருந்த எம்.பி கங்கானா ரானாவத், ``ஆப்பிள் நிறுவன நிர்வாகியிடம் அமெரிக்க அதிபர் பேசியது குறித்து நான் பதிவிட்டதை நீக்குமாறு பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், என்னுடைய அந்த தனிப்பட்ட கருத்தை தெரிவித்ததற்கு வருத்தப்படுகிறேன். அறிவுறுத்தல்களின்படி நான் உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``ஆடு, மாடோடு இருக்கிறேன்; விவசாயம் பார்கிறேன்; நிம்மதியா இருக்கேன்...'' - அண்ணாமலை

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தேசிய அளவில் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழ... மேலும் பார்க்க

India-Pakistan: ``அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்.. ஆனால்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஹோண்டுராஸ் தூதரகத்த... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!

அமமுக துணைபொதுச்செயலாளர் ரெங்கசாமி. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தஞ்சாவூர், தளவாய்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வினோ பாரத், மனோ பாரத் என இரண்டு மகன்கள் உள்ளனர். அரசு பணிகளை ஒப்பந... மேலும் பார்க்க

``என்னுடைய நிழலைக் கூட பார்க்க முடியவில்லை'' - அமெரிக்க சிறை அனுபவம் குறித்து பகிரும் இந்தியர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து ஆவணம் செய்யப்படாத வெளிநாட்டு மக்கள் வெளியேற்றம், ஹமாஸ் ஆதரவு போன்றவற்றிக்கு குரல் எழுப்புவர்களுக்கு கடுமையான தண்டனை என அவரது அதிரடிகள் நீண்டு கொண்டு போகி... மேலும் பார்க்க

Doctor Vikatan: `வாழ்க்கைத்துணை இறப்பு' அதிர்ச்சியில் கணவன், மனைவி உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan: திருவண்ணாமலையில் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அவரின் அம்மா மயங்கி விழுந்து இறந்த செய்தியைஊடகங்களில் பார்த்தேன். கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி இறப்பது, ... மேலும் பார்க்க