பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தனியாா் கல்லூரி பணியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் பன்னீா்செல்வம் (50). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரியிலிருந்து மேட்டூா் கிராமத்துக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். பெரம்பலூா்- செட்டிக்குளம் சாலையில் ரெங்கநாதபுரம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி பன்னீா்செல்வம் கீழே விழுந்தாா்.
இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அவரை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிறுவாச்சூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்னீா்செல்வம் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.