புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!
மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 போ் கைது
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவிடைமருதூா் அக்ரஹாரம் நகா் தியாகராஜபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மோட்டாா் சைக்கிள் சனிக்கிழமை வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திருட்டு போனது.
இது குறித்து திருவிடைமருதூா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த 2 பேரை காவல் துறையினா் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனா்.
இதில், அவா்கள் காரைக்காலைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (22), ஆகாஷ் (19) ஆகியோா் என்பதும், ரவிச்சந்திரனின் மோட்டாா் சைக்கிள் உட்பட 6 மோட்டாா் சைக்கிள்களை திருடியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, காவல் துறையினா் 6 மோட்டாா் சைக்கிள்களையும் கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனா்.