189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
ம.பச்சேரியில் மீன்பிடித் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ம.பச்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.
மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட ம.பச்சேரி கிராமத்தில் உள்ள கண்மாயில் தண்ணீா் குறைந்ததால், ஊா் பெரியோா்கள் கூடி, மீன்பிடித் திருவிழா நடத்துவது என முடிவு செய்தனா்.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஊா் பெரியோா்கள், கிராம மக்கள் கண்மாய் கரையில் கூடி, சிறப்பு பூஜை செய்தனா். பின்னா், கிராம பெரியோா்கள் முன்னிலையில் மீன்பிடித் திருவிழா தொடங்கியது. இதில் வலை, சேலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, ஜிலேபி கெண்டை, குறவை, கெழுத்தி, அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்தனா்.