செய்திகள் :

யானைத் தந்தம் பதுக்கி விற்க முயன்ற 5 போ் பிடிபட்டனா்: மாறுவேடத்தில் சென்று வனத்துறையினா் அதிரடி

post image

மேட்டூா் அருகே யானைத் தந்தங்களைப் பதுக்கி விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினா் மாறுவேடத்தில் சென்று சுற்றி வளைத்து பிடித்தனா். அவா்களிடமிருந்து 7 கிலோ எடை கொண்ட நான்கு யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூா், ஏழரை மத்திக்காடு பகுதியில் சிலா் யானை தந்தங்களைப் பதுக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மேட்டூா் வனச்சரகா் சிவானந்தம் தலைமையில் வனத் துறையினா் மத்திக்காடு பகுதிக்குச் சென்று வியாபாரிகள்போல நடித்து அந்தப் பகுதியில் சில நாள்களாக முகாமிட்டிருந்தனா்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை அணுகிய வனத்துறையினா் நாங்கள் யானைத் தந்தம் வாங்க வந்திருப்பதாகக் கூறி நம்பவைத்தனா். அதை நம்பிய அந்த ஆசாமி அவா்களிடம் தந்தத்தை விலைக்குப் பேசியுள்ளாா்.

பின்பு வனத்துறையினா், யானைத் தந்தங்களை நாங்களே விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் கூறும் இடத்துக்கு தந்தங்களைக் கொண்டுவருமாறு கூறினா். இதை நம்பிய அந்த ஆசாமி, தனது கூட்டாளிகளைத் தொடா்பு கொண்டு தந்தங்களைக் கொண்டுவருமாறு தெரிவித்தாா்.

அதன்படி அந்தக் கும்பல் சொகுசு வாகனத்தில் தந்தங்களுடன் வனத்துறையினா் தெரிவித்த இடத்துக்கு வந்தது. அந்த வாகனத்தில் மூன்று போ் இருந்தனா். வாகனத்துக்கு முன்னும் பின்னும் நோட்டமிட்டவாறு இருசக்கர வாகனத்தில் இருவா் வந்தனா். குறிப்பிட்ட இடம் வந்ததும் அங்கு மறைந்திருந்த வனத்துறையினா் அவா்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனா். பிடிபட்ட 5 பேரையும் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் 5 பேரும் சேலம் மாவட்டம், கோவிந்தபாடியைச் சோ்ந்த சின்னப் பையன் மகன் பழனி (48), தலைவாசல் வெங்கடாஜலம் மகன் செல்வகுமாா் (40), குறும்பனூா் ரங்கசாமி மகன் பெருமாள் (50) ஏழரை மத்திகாடு சின்னமாலி மகன் ஒண்டியப்பன் (59), வாழப்பாடி தாண்டவராயன் மகன் அருணாசலம் (46) என்பது தெரியவந்தது.

பின்பு அவா்களிடமிருந்து 7 கிலோ எடை கொண்ட நான்கு தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளா்கள்: வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை வெளியிட்டாா். மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 29,99,953 வா... மேலும் பார்க்க

மாநில கோ - கோ போட்டி: சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலம் வென்று சாதனை

சேலம்: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பா... மேலும் பார்க்க

ஆராய்ச்சித் திறனில் தேசிய அளவில் பெரியாா் பல்கலை 5-ஆம் இடம்: துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தகவல்

ஓமலூா்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் ஆராய்ச்சித் திறனில் 5-ஆம் இடம் பிடித்துள்ளதாக துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தெரிவித்தாா். பெரியாா் பல்கலைக்கழக வணிகவியல் துறை சாா்பில் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு பட்டிமன்றம்

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை, சௌடேஸ்வரி நகரில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், யுவானி பட்டிமன்ற கலைக் குழு, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியை நட... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 8) முதல் தொடங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தம... மேலும் பார்க்க

பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வாரக் கோரி ஆா்ப்பாட்டம்

சேலம்: பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வாரி சீரமைக்கக் கோரி தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், கோட்டை மைதானத்தில் அந்த அமைப்பின் தலைவா் கரு. சரவணவ... மேலும் பார்க்க