செய்திகள் :

`யார் அந்த Sir? பொள்ளாச்சி, பொள்ளாச்சி என்கிறார்கள்...' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

post image

அண்ணா பலகலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் காவல்துறையும் அரசாங்கமும் உண்மைகளை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் அரசைக் கண்டித்து போராட்டங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

யார் அந்த சார்?

"அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. அவர் குறித்த எஃப்.ஐ.ஆர் கசிந்து பரவியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 'அந்த சாருடன் இருக்க வேண்டும்' எனக் கேட்கப்பட்டதாக அதில் தெரிய வருகிறது. யார் அந்த சார்? உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.

'யார் அந்த சார்?' என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

இந்த சம்பவத்தில், '100க்கு கால் வந்தது. பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் POSH குழு உறுப்பினரான ஆசிரியர் இணைந்து புகார் அளித்துள்ளனர்' என காவல் ஆணையர் தெரிவிக்கிறார்.

ஆனால் மறுநாள், 'போஷ் குழு உறுப்பினர் புகார் கொடுக்கவில்லை' என அதனை மறுத்து பேசுகிறார். இப்படிப்பட்ட முரண்களால் சந்தேகம் நிலவுவதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.

அண்ணா பல்கலைக்கழகம்

ஐ.டி விங் நிர்வாகிகள் மீது வழக்கு!

எங்களது ஐடி விங் நிர்வாகிகள் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும், உண்மை குற்றவாளி அடையாளம் காணப்படவேண்டும் என்பதற்காக 'யார் அந்த சார்?' என்ற பதாகையை ஏந்தி மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இவர்கள் யார் பெயரையும் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் மீது பல செக்‌ஷன்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சர்வ சாதாரணமாக நடக்கும் பாலியல் வன்முறைகள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெண் செவிலியரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பணம் பறிக்க முயற்சி செய்தார் திமுக நிர்வாகி ஒருவர்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்படுகிறது. அவர் டி.எஸ்.பிக்கு பரிந்துரைக்கிறார். ஆனால் இன்று வரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி

இப்படி சர்வசாதாரணமாக பாலியல் வன்கொடுமைகள் இந்த ஆட்சியில் நடைபெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் எல்லாரும் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு வேண்டப்பட்ட யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள். அப்படியான ஒரு செய்தி பரவலாக உள்ளது. உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.

பொள்ளாச்சி... பொள்ளாச்சி என்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடைபெற்ற உடனே நான் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்... உங்கள் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் - சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

யாரைக் காப்பாற்ற நினைக்கிறீர்கள்?

ஒரு உதாரணம் சொல்கிறேன், அண்ணா நகரில் ஒரு சிறுமி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டார். அவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். ஆனால் காவலர்கள் மெத்தனப்போக்கில் இருக்கின்றனர். வழக்கு மற்றொரு காவல் நிலையத்துக்கு மாறுகிறது... இந்த செய்தியெல்லாம் வெளியான பிறகு உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கிறது. நீங்கள் இதற்கு எதிராக ஏன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறீர்கள்? மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம் இருக்கும். யாரைக் காப்பாற்ற மேல்முறையீடு செய்கிறீர்கள்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இந்த ஆட்சியில்தான் நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, மாணவிகளுக்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

திருவாரூர் மற்றும் மன்னார்குடி கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுவதாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் கசிந்திருக்கிறது. அதிலிருக்கும் தகவல் அடிப்படையில்தான் நாங்கள் கேட்கிறோம், 'யார் அந்த சார்' என்று. ஏன் இவ்வளவு பயம். யாரைக் காப்பாற்ற அரசும் காவல்துறையும் இவ்வளவு மெனக்கெடுகிறது. இதற்கெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு தீர்வு காணப்படும்." எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி - மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு கடந்த 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விழுப்புர... மேலும் பார்க்க

புது உறவு தொடக்கம்? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து தள்ளும் சரத் பவார் மகள், உத்தவ் கட்சி

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலிக்கு சென்றார். அங்கு 11 நக்சலைட்கள் பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதனை பிரதமர் நரேந்தி... மேலும் பார்க்க

`கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமையைச் சிதைக்கும்..!' - முரசொலி காட்டம்; திமுக கூட்டணியில் சலசலப்பா?

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இம்மாநாட்டில் பேசிய சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர... மேலும் பார்க்க

Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட், Stalin தந்த Alert! | Elangovan explains | Vikatan

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,துரைமுருகன், கதிர் ஆனந்த் இடங்களில் இரண்டாவது நாளிலும் தொடர்ந்த அமலாக்கத்துறை ரெய்டு. இதில், நள்ளிரவில் துரைமுருகனுக்கு போன முக்கியமான ரிப்போர்ட். 'இவையெல்லாம் டெல்லியின் கேம... மேலும் பார்க்க

துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?

அமலாக்கத்துறை சோதனை!கடந்த 3-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது. மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீ... மேலும் பார்க்க