செய்திகள் :

யூனியன் வங்கியில் மேலாளர் பணி: காலியிடங்கள் 250

post image

யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 250 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Wealth Manager

காலியிடங்கள்: 250

சம்பளம்: மாதம் ரூ. 64,820 - 93,960

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

தகுதி: நிதியியல் பிரிவில் எம்பிஏ, பிஜிடிஎம், பிஜிபிஎம், பிஜிடிபிஏ போன்ற ஏதாவதொரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வெல்த் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, வேலூர், விருதுநகர், நாகர்கோவில் போன்ற இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ,177, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.1,180, கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம்

Union Bank of India has released the recruitment notification to fill the 250 Wealth Manager (Scale MMGS – II) Posts

டாட்டா மெமோரியல் மருத்துவமனையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

டாட்டா மெமோரியல் மருத்துவமனையில் காலியாகவுள்ள அலுவலர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். : ACTREC/ADVT/A-12/2025பணி: Sc... மேலும் பார்க்க

மத்திய துணை ராணுவப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) காலியாகவுள்ள கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

இந்திய விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து மட்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: Agniveer Vayu (Sp... மேலும் பார்க்க

இசைக்கலைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள இசைக்கலைஞர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Cultural Quota Jobs (Group C)பிரிவு: Classical Vocalகாலியிடம்: 1ப... மேலும் பார்க்க

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜேஆர்எப், கள உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:விளம்பர எண். MOES/PAMC... மேலும் பார்க்க

வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பரோடா வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி,எஸ்டி,ஓபிசி பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண... மேலும் பார்க்க