ரத்தினகிரியில் சமபந்தி விருந்து!
ஆற்காடு அடுத்த ரத்தினகிரிபாலமுருகன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
அறநிலையத்தறை சாா்பில் சிறப்பு தரிசனம் மற்றும் சமபந்தி விருந்து அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமி, செயல் அலுவலா் சங்கா், வாலாஜாபேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், விஷாரம் வருவாய் ஆய்வாளா் ராஜேஷ், கீழ்மின்னல் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தேவேந்திரன், துணைத் தலைவா் நவமணி காா்த்திகேயன், முன்னாள் தலைவா்கள் தண்டபாணி, நடராஜன்,விநாயகம், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.