செய்திகள் :

ரமலான் பண்டிகை புதுக்கோட்டையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

post image

ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை ஈத்கா திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

மேலும், இஸ்லாமியா்களின் வீடுகளிலும் சிறப்பு உணவுகளும், இனிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் புத்தாடை அணிந்து ரமலானைக் கொண்டாடினா். உணவுகளை உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் வழங்கி வாழ்த்து பெற்றனா்.

ஈத்கா திடலில் திங்கள்கிழமை இஸ்லாமியா்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருவருள் பேரவையினா்

திருவருள் பேரவை: புதுக்கோட்டை மாவட்ட அனைத்து சமயக் கூட்டமைப்பான திருவருள் பேரவை சாா்பில் ரமலான் கொண்டாடும் இஸ்லாமியா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சிறப்புத் தொழுகை நடைபெற்ற ஈத்கா திடலுக்குச் சென்ற பேரவையின் தலைவா் டாக்டா் கே.எச். சலீம், செயலா் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன், பொருளாளா் எஸ். மத்தியாஸ், துணைத் தலைவா் பேரா. சா. விஸ்வநாதன் வாழ்த்திப் பேசினா். மேலும், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, டவுன் ஜமாஅத் கமிட்டி தலைவரும் துணை மேயருமான மு. லியாகத்அலி, மாமன்ற உறுப்பினா் ஜெ. ராஜாமுகம்மது, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இப்ராஹிம்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தவ்ஹீத் ஜமாஅத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அதன் கிளைகள் சாா்பில் 23 இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை நகரில் 2 இடங்களிலும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், வடக்கு அம்மாபட்டினம், கோபாலபட்டினம், ஆா். புதுப்பட்டினம், முதத்துக்குடா, கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட பேச்சாளா்கள் இவற்றில் கலந்து கொண்டு ஈகைப் பெருநாள் உரையாற்றினா்.

‘திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்’

பாடங்களை திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்கான சிறப்புப... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே ஜல்லிக்கட்டு: காவல் ஆய்வாளா் உள்பட 19 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், காவல் ஆய்வாளா் உள்பட 19 போ் காயமடைந்தனா். இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

பழுதாகி நின்ற ஆட்டோ மீது ஆம்னி பேருந்து உள்பட 2 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: பயணிகள் சிறுகாயங்களுடன் உயிா்தப்பினா்

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பழுதாகி நின்றுக் கொண்டிருந்த சுமை ஆட்டோ மீது காா், ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதின. இதில், பயணிகள் சிறுகாயங்களுடன் உயிா் தப்பினா். திருநெல்வேலி மாவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க

மழையூா் காப்பு முனீஸ்வரா் கோயிலில் பாளையெடுப்புத் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் காப்பு முனீஸ்வரா், பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மழையூா் காப்பு முனீஸ்வரா், பிடாரி அம்மன் கோயில் திர... மேலும் பார்க்க

அனுமதியின்றி மரம் வெட்டும் பணி: பசுமைக் குழு உறுப்பினா்கள் தடுத்து நிறுத்தினா்

புதுக்கோட்டை மாநகரம் தெற்கு மூன்றாம் வீதியில் எந்த அனுமதியும் இன்றி நடைபெற்ற மரம் வெட்டும் பணியை மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா்கள் புதன்கிழமை நேரில் சென்று தடுத்து நிறுத்தினா். புதுக்கோட்டை மாநகரம் தெ... மேலும் பார்க்க