தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
ஒடிஸாவில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக வடமாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். வெளிமாநிலங்களில் இருந்து ரயிலில் வரும் பயணிகளையும் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், ஒடிஸாவில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் வந்திறங்கிய ஆனந்த பிபாா் (19) என்பவரின் கைப்பையை காவல் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா். அப்போது அவரது கைப்பையில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.