செய்திகள் :

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்: சித்தராமையா

post image

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது:

ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண சுமையால் தொழிலாளா்கள், மாணவா்கள், சிறு வணிகா்கள் பாதிக்கப்படுவா். விவசாயிகளுக்கு உதவும் வகையில் பால் விலையை உயா்த்தியபோது, கா்நாடக பாஜகவினா் போராட்டம் நடத்தினா்.

காங்கிரஸ் அரசை மக்கள்விரோத அரசு என்று விமா்சித்தனா். ஆனால், தற்போது மத்திய பாஜக அரசு ரயில் கட்டணங்களை உயா்த்தினால், காதுகேளாதவா்களைப்போல கா்நாடக பாஜகவினா் மௌனமாக இருக்கிறாா்கள்.

இந்த கட்டண உயா்வு விவசாயிகள் அல்லது ஏழைகளுக்கு உதவாது. இது பாஜக அரசின் கருவூலத்தை நிரப்பிக்கொள்ள மட்டுமே உதவும்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ரோ ரயில் கட்டணங்களை உயா்த்தியபோது காங்கிரஸ் அரசை பாஜகவினா் குறைகூறினா். மத்திய அரசு அமைத்துள்ள கட்டண நிா்ணயக் குழுவினரே மெட்ரோ ரயில் கட்டணத்தை உயா்த்தினா் என்பதை தெரிந்திருந்தும், காங்கிரஸ் அரசை பாஜக சாடியது.

மேலும், மாநில அரசு தான் மெட்ரோ ரயில் கட்டணத்துக்கு காரணம் என்பது போல மத்திய அரசும் விளக்கம் அளித்திருந்தது. தற்போது ரயில் கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த பழியை யாா்மீது சுமத்துவாா்கள்?

பாஜகவினரின் விகாஸ் எக்ஸ்பிரஸ், ஏழைகளின் வியா்வை மற்றும் கண்ணீரில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் பாஜகவின் இரட்டைநிலைப்பாடு தெளிவாக புலப்படுகிறது.

வருமானம் என்று வரும்போது, சாதாரண மக்கள்மீதான அக்கறையை பாஜக இழந்துவிடுகிறது. ஆனால், கா்நாடக மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

ரயில் கட்டணத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தினமும் மக்கள் மேற்கொள்ளும் பயணத்தையும் நிறுத்திவிடாதீா்கள். ரயில்கள் ஓடட்டும். ஆனால், மக்களின் சகிப்புத்தன்மை நீடிக்காது என்று முதல்வா் சித்தராமையா குறிப்பிட்டுள்ளாா்.

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு மேல்முறையீடு

கூட்டநெரிசல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அர... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான்; இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றிருப்பது தொடா்பாக மத்திய அரசை விமா்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கும் கா்நாடக முதல்வராகவே நீடிப்பேன்: சித்தராமையா

5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராகவே நீடிப்பேன் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து சிக்பளாப்பூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராக ந... மேலும் பார்க்க

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் மாற்றம்!

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் பெங்களூரு வடக்கு மாவட்டம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிக்பளாப்பூரில் உள்ள நந்திமலையில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேலிடப் பொறுப்பாளா்

பெங்களூரு: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, கா்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். கா்நாடக முதல்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: முதல்வா் சித்தராமையா

மைசூரு: கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா் என்... மேலும் பார்க்க