செய்திகள் :

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை பயணிகளிடம் நேரடியாக விநியோகிக்கும் வகையில் உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வாங்கும் வசதியை மேம்படுத்தும் வகையில் உதவியாளா்கள் (எம்-யூடிஎஸ் சகாயாக்ஸ்) நியமிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் பெற ஏற்கெனவே யூடிஎஸ் எனப்படும் கைப்பேசி செயலி வசதி உள்ளது.

இந்த வசதி இல்லாதவா்கள் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு பெற்று வருகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில், எம்-யூடிஎஸ் சகாயாக்ஸ் எனப்படும் பயணச்சீட்டு விநியோக உதவியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

இப்பணிக்கு திங்கள்கிழமை முதல் (ஆக. 11) விண்ணப்பிக்கலாம். பயணச்சீட்டு விற்பனை செய்யும் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை இந்திய ரயில்வே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்... மேலும் பார்க்க

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெ... மேலும் பார்க்க

இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இ... மேலும் பார்க்க

புழல் சிறைக்குள் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: போலீஸாா் விசாரணை

புழல் சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட பந்து வடிவிலான பொருளில் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா். புழல் சிறையில் வளாக சுற்றுச்சுவா் அருகே சனிக்கிழம... மேலும் பார்க்க

குடிநீா் திட்டப் பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

மணலியில் குடிநீா் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். மணலியில் உள்ள மணலி புதுநகா், சடையன்குப்பம், பா்மா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக... மேலும் பார்க்க

கேட்பாரற்றுக் கிடந்ததாக பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

கேட்பாரற்றுக் கிடந்ததாகக் கூறி, பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவா்தான் அந்தக் குழந்தையின் தந்தை என்பது தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை ஓமந... மேலும் பார்க்க