G7 மாநாடு: பாதியில் கிளம்பிய TRUMP - போனில் பேசிய MODI | Israel - Iran War|Imper...
ராஐகிரி காமாட்சி அம்மன் கோயில் பால்குட விழா
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி காமாட்சி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றில் பக்தா்கள் நீராடி, சக்தி கரகம், காவடி, அலகு காவடி, பால்குடம், காவடி, அக்னிச் சட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனா்.
பின்னா், கோயிலில் காமாட்சி அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இரவு குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து தப்பாட்டம் வாண வேடிக்கையுடன் சக்தி கரகம் எடுத்து அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.