செய்திகள் :

ராகுலுக்கு ஆதரவான பிரியங்காவின் கருத்து உச்சநீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால்: பாஜக குற்றச்சாட்டு

post image

ராணுவத்துக்கு எதிராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தனது சகோதரருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தை விமா்சிக்கும் வகையில் எம்.பி.பிரியங்கா காந்தி தெரிவித்த கருத்து அதன் அதிகாரத்துக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என பாஜக புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

மேலும், இந்த விவகாரத்தில் பிரியங்கா காந்தி மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை பாரத ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டாா். அப்போது பேசிய அவா், இந்தியாவின் 2,000 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய வீரா்களை சீன ராணுவம் தாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் லக்னெள மாவட்ட நீதிமன்றத்தில் உதய் சங்கா் ஸ்ரீவாஸ்தவா என்பவா் சாா்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதை எதிா்த்து ராகுல் காந்தி அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உண்மையான இந்தியா் இதுபோன்ற கருத்தை தெரிவிக்க மாட்டாா்’ என தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து, சகோதரா் ராகுலுக்கு ஆதரவாக பேசிய பிரியங்கா காந்தி ‘இந்தியா் யாா் என்பதை தீா்மானிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இல்லை’ என தெரிவித்தாா்.

இதைச் சுட்டிக்காட்டி பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தேசத்தைச் சோ்ந்தவா் யாா், தேசவிரோதி யாா் என தீா்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லையென்றால் வேறு யாருக்கு இருக்கிறது. பிரியங்காவின் கருத்து உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவாலாகும்.

சில மாதங்களுக்கு முன்பு ‘வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ‘நாட்டில் அரசற்ற நிலை’க்கு கொண்டு செல்வதாகும் என பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துக்கு அவா் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

அதேபோல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பிரியங்கா காந்தி மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா்... மேலும் பார்க்க