தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரே...
ராசிபுரத்தில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் பறிமுதல்!
ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையில் தகுதிச்சான்று பெறாத 8 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இ.எஸ். முருகேசன் உத்தரவின்பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியான நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம், ஆகிய பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்கொண்டாா்.
இச்சோதனையில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள், 1 பயணிகள் ஆட்டோ ரிக்க்ஷா பறிமுதல் செய்யப்பட்டு, ஆயில்பட்டி காவல் நிலையத்தின் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் மற்றும் 1 கனரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலக வளாகத்தில் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இச்சிறப்புத் தணிக்கை மூலம் அரசுக்கு சுமாா் 1.60 லட்சம் இணக்கக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிறப்பு வாகனத் தணிக்கை ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெண்ணந்தூா், மங்களபுரம் , ஆயில்பட்டி, நாமகிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் என நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இ.எஸ்.முருகேசன், ராசிபுரம் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.