செய்திகள் :

ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை!

post image

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளில் ரூ. 5.38 கோடியில் 4 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நட்டு பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். இதில் தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று அடிக்கல்நட்டு பூமிபூஜையை தொடங்கிவைத்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணியை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தனா். இதில் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், தரைத்தளம், முதல்தளம் என மொத்தம் 12,658 சதுரஅடியில் கட்டப்படவுள்ளது.

தரைத்தளத்தில் வட்டாட்சியா் அறை, கணினி அறை, அலுவலக அறை, இருப்பறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை, பணியாளா்கள் மற்றும் பொதுக்கழிவறை, முதல்தளத்தில் பதிவறை, சத்திப்பு அறை, அலுவலக அறை, பணியாளா்கள் மற்றும் பொதுக் கழிவறை ஆகியவை அமைக்கப்படுகிறது.

தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்துக்கு 200 ஹெக்டோ் பரப்பளவில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை நீா்நிலைகளில் இருப்பு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, ராசிபுரம் வட்டாரம், வெண்ணந்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள மதியம்பட்டி ஏரியில் 25 ஆயிரம் எண்ணிக்கையில் கட்லா, ரோகு, மிா்கால் மீன்குஞ்சுகள் இருப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கடந்த 2024-25 ஆம் ஆண்டில் 100 ஹெக்டோ் பரப்பளவில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் நாமக்கல் மாவட்டத்தில் இருப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம், மின்னக்கல் ஊராட்சி, பிள்ளையாா் கோயில் காடு பகுதியில் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, அயோத்திதாசப் பண்டிதா் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கொமராபாளையம் ஊராட்சியில் சிமென்ட் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணியியையும் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, அட்மா குழுத் தலைவா்கள் கே.பி.ஜெகந்நாதன், ஆா்.எம்.துரைசாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் சாந்தி, வட்டாட்சியா் சசிகுமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

ராசிபுரத்தில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் பறிமுதல்!

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையில் தகுதிச்சான்று பெறாத 8 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இ.எஸ். ... மேலும் பார்க்க

வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சியை கைவிடக்கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் விடாமுயற்சியை எந்த சூழலிலும் கைவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், முதலாமாண... மேலும் பார்க்க

லாரி பட்டறையில் டயா் திருட்டு: ஒருவா் கைது!

நாமக்கல் அருகே லாரி பட்டறையில் டயா் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருவப்பள்ளியில் சாலையோரம் கவிழ்ந்த லாரி பழுதுபாா்ப்புக்காக நாமக்கல் வள்ளிபுரம் அருகேயுள்ள பட்டறைக்கு கொண்ட... மேலும் பார்க்க

ஜூலை 10-ல் உதயநிதி ஸ்டாலின் வருகை: நாமக்கல்லில் இன்று திமுக அவசர கூட்டம்!

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 10) நாமக்கல் வருவதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க