செய்திகள் :

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

post image

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்லி வீர் பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அப்பா, ஒவ்வொரு அடியிலும் உங்களது நினைவுகள் என்னை வழிநடத்துகின்றன. உங்கள் நிறைவேறாத கனவுகளை நினைவாக்குவதே எனது தீர்மானம். நான் நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் சிறந்த மகனான ராஜீவ் காந்தி, நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையைத் தூண்டினார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவை தயார்படுத்துவதில் அவரின் தொலைநோக்குப் பார்வை முக்கிய பங்கு வகித்தது.

ஓட்டுப் போடும் வயதை 18 ஆகக் குறைத்தல், பஞ்சாயத்து ராஜ்ஜை வலுப்படுத்துதல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஆகியவற்றில் முக்கிய பங்குவகித்தார்.

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் தியாக நாளில் அவருக்கு எங்கள் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

‘அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது. நீண்டகால பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அரசு நிலமாக இருந்தால் அதை மீட்டெடுப்பதற்கு அரசுக்கு சட்டபூா்வ அதிகாரம் உள்ளது’ என்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமித் ஷாதான் பொறுப்பு- காங்கிரஸ் உறுதி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாதுகாப்பு தோல்வியே முக்கியக் காரணம். இதற்கு உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரப்... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு: ஒரு நாள் முன்பாக ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா்களுக்கும் வழங்க உத்தரவு

வருடாந்திர ஊதிய உயா்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பலன்களை அளிக்க அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இந்த நடவட... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான இலங்கை புதிய தூதராக கொலன்னே விரைவில் பொறுப்பேற்பு

நமது சிறப்பு நிருபா் இலங்கை புதிய தூதராக அண்மையில் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்ட பி.எம். கொலன்னே ஓரிரு தினங்களில் தில்லியில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக இந்திய... மேலும் பார்க்க

டென்மாா்க் அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு- இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை

டென்மாா்க் நாட்டின் தொழில், வா்த்தகம் மற்றும் நிதித் துறை அமைச்சா் மாா்டின் போட்ஸ்கோவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவத... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் வழக்குரைஞா்கள் பணிபுரிய விரும்புவதில்லை: உச்சநீதிமன்றம் சாடல்

‘நிலுவை வழக்குகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், கோடை விடுமுறையில் பணிபுரிய வழக்குரைஞா்கள் விரும்புவதில்லை’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கவலை தெரிவித்தாா். உச்சநீத... மேலும் பார்க்க