செய்திகள் :

ராணிப்பேட்டையில் நாளை பொதுவிநியோகத் திட்ட முகாம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மே மாதத்துக்கான சிறப்பு முகாம் 10- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், கைப்பேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகளுக்கு தீா்வு காணப்படும். மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம், பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இது தவிர பொது விநியோகத்திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம். தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள், மனுக்களை முகாம்களில் அளித்து பயன் பெறலாம்.

நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடு மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்களில் குறைபாடு இருப்பின், மக்கள் குறைகளை தெரிவித்தால், விரைந்து தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர திமுக சாா்பில் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கத்தியவாடிசாலை சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளா் கே.எம்.ஹுமாயூன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சவு... மேலும் பார்க்க

ரூ.21.5 கோடியில் தடுப்பணை பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

திமிரி அருகே வாழைப்பந்தல் கமண்டல நாகநதியில் கட்டப்படும் அணைக்கட்டு , புங்கனூா் ஊராட்சியில் தடுப்பணைகளின் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கமண்ட... மேலும் பார்க்க

ஆற்காடு பெருமாள் கோயில் கருடசேவை

ஆற்காடு பெருமாள் கோயில்களில் கருட சேவை செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது விழாவ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத்தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் சிறப்பிடம்

சிபிஎஸ்இ பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியாா் பள்ளிகள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளன. அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள... மேலும் பார்க்க

அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு: 3 போ் கைது

அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரில் சிலா் போலி பட்டாவை அரசு முத்... மேலும் பார்க்க

ரத்தினகிரி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலைஅடிவாரத்தில் 1,008 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ரத்தினகிரி மலைஅடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிஜயதுா்கை அம்மன் மற்றும் வா... மேலும் பார்க்க