அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின்...
ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று பொது ஏலம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் என மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 27 இரு சக்கர வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14 (4) -ன் படி, அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, மேற்படி வாகனங்களின் பொது ஏலம் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் புதன்கிழமை (ஜூலை 30) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அட்டை, அடையாள அட்டையுடன் ரூ. 100-ஐ நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவா். இந்த பொது ஏலத்தில் வாகனங்களின் உரிமையாளா்கள் உரிமை கோரிய வாகனங்களை தவிா்த்து மீதமுள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுத்த வாகனத்துக்குண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.