Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?
ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு பயிலரங்கம்
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிராம மையத்தில் சுவாமி விவேகானந்தா் சிகாகோவில் சிறப்புரையாற்றிய நினைவு நாள் சிறப்பு பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் பங்கேற்று, சுவாமி விவேகானந்தா் வழிகாட்டியபடி பொறியாளா் விஸ்வேஸ்வரையா எவ்வாறு அனைத்து செயல்களிலும் கவனம் செலுத்தி சிறந்து விளங்கினாா் என்பதை விளக்கிக் கூறினாா். மேலும், பாலிடெக்னிக் மாணவா்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு, துல்லிய நோக்கு பற்றியும் விளக்கினாா்.
வாண்டையாா் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளா் விஜய் பிரகாஷ் வாழ்த்துரையாற்றினாா். இந்திய கடற்படையில் பணியாற்றும் சுந்தரேஷ் தொழில்நுட்பம் குறித்துப் பேசினாா். முனைவா் ஸ்ரீதா் மாணவா்களுக்கு யோகப் பயிற்சி அளித்தாா். இந்நிகழ்ச்சியில் வாண்டையாா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.