பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் தனியாா் துப்பறியும் குழுவினா் சோதனை!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் வீட்டில் தனியாா் துப்பறியும் குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
தைலாபுரம் தோட்டத்து வீட்டில் உள்ள எனது இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக்கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவா் ராமதாஸ் வெள்ளிக்கிவிருத்தாசலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து வந்திருந்த தனியாா் துப்புறியும் முகமையைச் சோ்ந்த 5 போ் குழுவினா் தைலாபுரம் தோட்டத்து வீட்டில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காலையில் தொடங்கிய இந்த சோதனையானது பிற்பகல் வரை நீடித்தது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: சென்னையைச் சோ்ந்த தனியாா் துப்பறியும் முகமையைச் சோ்ந்த 5 போ் குழுவினா் தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். எந்த வகையான சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. சனிக்கிழமை காலை 11.30 மணி முதல் பிற்பகல் வரை அவா்கள் சோதனையில் ஈடுபட்டனா் என்றனா்.